தந்தை மீது பாலியல் புகார் இருந்தும் #MeToo-வுக்கு ஆதரவளிக்கும் நடிகை நந்திதா தாஸ்..

நடிகையும் இயக்குநருமான நந்திதா தாஸின் தந்தை ஜத்தின் தாஸ் மீது பாலியல் புகார் இருந்தபோதிலும் #MeToo இயக்கத்துக்கு தான் அளித்து வந்த ஆதரவில் எந்த மாற்றமும் இல்லை என்று நந்திதா தாஸ் தெரிவித்துள்ளார்.

நடிகையும் இயக்குநருமான நந்திதா தாஸின் தந்தை ஜத்தின் தாஸ் மீது பாலியல் புகார் இருந்தபோதிலும் #MeToo இயக்கத்துக்கு தான் அளித்து வந்த ஆதரவில் எந்த மாற்றமும்இல்லை என்று நந்திதா தாஸ் தெரிவித்துள்ளார்.

பத்ம பூஷன் விருது பெற்ற பிரபல ஓவியர் ஜதின் தாஸ். இவர் மீது சமீபத்தில் ஒரு பெண் #MeToo ஹேஷ்டேக்கின் கீழ் பாலியல் குற்றச்சாட்டு கூறினார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு தனக்கு திருமணமான தருணத்தில் ஜதின் தாஸை சந்தித்ததாகவும், அப்போது தனக்கு சில நாட்கள்உதவியாளராக இருக்குமாறு ஜதின் கேட்க நிஷா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

ஆனால் தனிமையில் அவர் நிஷாவை கட்டிபிடித்தும் தாகாத வகையில் நடந்துகொண்டார் என்றும், ஜதின் தன்னிடம் அத்துமீற முயன்றபோதுஅங்கிருந்து தப்பித்து சென்றதாக அந்த சம்பவம் குறித்து தனது டுவீட்டர் பக்கத்தில் நிஷா பதிவிடுள்ளார்.

இந்நிலையில் பெண் உரிமைக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஜதின் தாஸ்சின் மகள் நந்திதா தாஸ், தனது தந்தை மீதான குற்றச்சாட்டுக்கு பதில் கூறமாட்டார், இனி மீடூ குறித்து கருத்து கூறமாட்டார் என்று விமர்சிக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து #MeToo-வுக்கு ஆதரவளிப்பேன் என்றுநந்திதா தாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் கூறியதாவது ‘ #MeToo இயக்கத்துக்கு நான் எனது உறுதியான ஆதரவை அளித்து வருகிறேன்.

எனது தந்தைக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து மீடூ ஹெஷ்டேக்கில் புகார் வெளியிடும் பெண்களுக்கு கருத்து ரீதியாக ஆதரவாக இருப்பேன்.

#MeToo குறித்து நான் முதலில் இருந்தே, இது கேட்பதற்கான நேரம் என்று கூறி வருகிறேன். பாதிக்கப்பட்ட பெண்களோ, ஆண்களோ பேசும்போது, அதை மற்றவர் செவி கொடுத்து கேட்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்’’

என்றுஅவரது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

வடசென்னை மக்கள்னா உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா?: கிளம்பியது புதிய எதிர்ப்பு

சபரிமலையில் கலவரத்தை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ். முயற்சி : பினராயி விஜயன் குற்றச்சாட்டு..

Recent Posts