முக்கிய செய்திகள்

பிப்.11-ந்தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு : இந்திய வானிலை மையம்..

வரும் 11ஆம் தேதி பெருமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வரும் 9, 10 ஆகிய தேதிகள் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை.

ஆனால் 11ஆம் தேதி அதிரடி ஆரம்பமாக வாய்ப்பிருக்கிறது. பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி, மேற்கு உத்தரப்பிரதேசம், இமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட், விதர்பா ஆகியவற்றில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.

இதில் தெற்கு கர்நாடகாவின் உள்மாவட்டங்களும் உள்ளடங்கும். இதையடுத்து வரும் 12, 13 ஆகிய தேதிகளில் காஷ்மீர், இமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்திரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கனமழையும், கடும் பனிப்பொழிவும் பெய்ய வாய்ப்புள்ளது. பஞ்சாப், அரியானா, சண்டிகர், டில்லி, உ.பி., மத்திய மகாராஷ்டிரா, மராத்வாடா, ம.பி., விதர்பா ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.