வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுபெறக்கூடும்
தொடர்ந்து அதே திசையில் நகர்ந்து, வரும் 30-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து கடலூர்-புதுச்சேரி கடற்கரையை கடக்கும். மரக்கானம் கல்பாக்கம் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக்கடக்கும் போது அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் 3 மாவட்டங்களுக்கு நவம்பர் 30 ஆம் தேதி ரெட் அலர்ட் (சிவப்பு எச்சரிக்கை) விடுத்துள்ளது. வட மாவட்ட கடலோர மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.