புகழ்பெற்ற புரட்சியாளரும் முன்னாள் கியூபா அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோ வின் மகன், ஃபிடல் ஆஞ்சல் காஸ்ட்ரோ இன்று காலை தற்கொலை செய்துகொண்டார். ஃபிடலிடோ என்று அழைக்கப்படும் இவர் கடந்த சில மாதங்களாகவே கடும் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அதற்கு அவர் சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார். அவருக்கு வயது 68.
