முக்கிய செய்திகள்

பழம் பெரும் இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் காலமானார்..

பழம்பெரும் சினிமா இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். இயக்குனர் ஸ்ரீதரிடம் உதவியாளராக பணியாற்றிய இவர், 1967 ல் அனுபவம் புதுமை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். சிவாஜி நடித்த கலாட்டா கல்யாணம், சிவகாமியின் செல்வன், விஜய் நடித்த ஒன்ஸ் மோர் உள்ளிட்ட படங்களை தயாரித்து இயக்கியவர்.