பில்டர் காபி.. : சுந்தரபுத்தன்

காபி என்பது காஸ்ட்லியாகவும் சுவையற்ற பானமாகவும் மாறிவிட்டதோ?

சென்னை மாநகரை விட்டு தாண்டினால் கும்பகோணம் பில்டர் காபி என்று கொடுமைப்படுத்துவார்கள். பில்டர் காபி போடுகிறவர் உத்தரப்பிரதேசத்தில் இருந்து வந்திருப்பார். கும்பகோணமும் தெரியாது. பில்டரும் தெரியாது.

சரவணபவனில் காபியின் விலை ரூ. 30. தேநீர் ரூ. 35. மினி காபியுடன் ஒரு ரஸ்க் அல்லது பிஸ்கெட் தருவார்கள். விலை ரூ. 30. அசோக் நகர் சரவண பவனில் காபி குடித்துப் பழகிவிட்டது.

குப்தா பவனில் ரூ. 40. தெவிட்டும் அளவுக்குக் கொடுக்கிறார்கள். அடையாறு ஆனந்த பவனும் சங்கீதாவும் வந்துவிட்டார்கள்.

திருவாரூர் வாசன் கபே, வடக்கு வீதியில் அலங்கார், கும்பகோணத்தில் வெங்கட்ரமணா, தஞ்சாவூரில் வெங்கடேஸ்வரா கொரடாச்சேரியில் கோமதி விலாஸ் என காபிக்கும் சிற்றுண்டிகளுக்கும் பேர்போனவை. இப்போது மன்னார்குடியில் ஐங்கரன்.

ஊரில் பெரிய டபரா செட்டில் கொடுப்பார்கள். ஒரு காபியில் பசியை மறக்கிறவர்கள் உண்டு. சில நேரங்களில் சென்னையில் காபி குடித்தால் தண்டனையாக மாறிவிடும். காபித்தூள் வாசனையுடன் வெந்நீர் குடிப்பதுபோல இருக்கும். அல்லது புளியங்கொட்டை மணம்.

ஞாயிறன்று வடபழனி ஃபோரம் மாலுக்குச் சென்றிருந்தோம். புதிய தோற்றத்தில் ஒரு ரெஸ்ட்டாரண்ட். சுவர்களில் ஆவி பறக்கும் காபி படங்கள். காபி குடிக்கலாமே என்று கேட்டோம். விலை ரூ. 100.

நூறு ரூபாயா என்றதும் கேஷியரின் பார்வையே வேறுவிதமாக இருந்தது. சத்தம் போடாமல் சாப்பிட்டுவிட்டு நகர்ந்தோம். சில்வர் டபரா செட்டில் கொடுத்தார்கள்.

சுவை தேவலாம்.

நன்றி

சுந்தரபுத்தன் முகநுால் பதிவு