முக்கிய செய்திகள்

நிதியமைச்சரின் அறிவிப்பில் ஏமாற்றமே மிஞ்சியது: ப.சிதம்பரம்..

மத்திய நிதியமைச்சரின் அறிவிப்பில் ஏமாற்றமே மிஞ்சியது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார்…

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்ட அறிவிப்பில் ஏமாற்றமே மிஞ்சியதாக முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் அறிவித்துள்ளார்.

இது குறித்து ப.சிதம்பரம் கூறுகையில், “ ஏழை மக்கள், பசியில் உள்ளவர்களுக்கு நிதியமைச்சரின் அறிவிப்பில் எதுவும் இல்லை.

அன்றாடம் கடுமையாக உழைப்பவர்களுக்கு மத்திய அரசின் அறிவிப்பு பெரிய அடியாக விழுந்துள்ளது.

மாநில அரசகளும் அதிக கடன் வாங்க அனுமதிக்க வேண்டும். அதற்கும் மத்திய அரசு தயாராக இல்லை. மத்திய அரசு அதிக கடன் வாங்க வேண்டும்;

ஆனால், அதை செய்ய அவர்கள் தயாராக இல்லை சொந்த ஊர்களுக்கு நடந்து செல்பவர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதுவும் அறிவிக்கவில்லை” என்றார்.