கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு ஜிஎஸ்டி இல்லை : மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்

கட்டுமான பணிகள் நிறைவு பெற்றதற்கான சான்று பெறப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வீடுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி தொடர்பான தகவல்களை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதில், கட்டுமான பணிகள் நிறைவுபெற்றதற்கான சான்று பெறப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது என்று கூறியுள்ளது.

ஆனால், கட்டுமான பணி தொடங்கும் போதோ அல்லது கட்டுமானம் முடிந்து நிறைவு சான்று பெறப்படாமலோ உள்ள வீடுகளை வாங்கினால் ஜிஎஸ்டி விதிகள் பொருந்தும் என தெரிவித்துள்ளது.

மேலும், ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்பு வீடு திட்டம், ராஜிவ் ஆவாஸ் யோஜனா, பிரதமரின் வீடு கட்டும் திட்டம் ஆகியவற்றின் கீழ் கட்டப்படும்

குறைந்த விலை வீடுகளுக்கான 8 சதவீதம் ஜிஎஸ்டியை கட்டுமான நிறுவனங்கள் தங்களது வரி வரவில் இருந்து கழித்துக் கொள்ளலாம் எனவும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆணவப்படுகொலையால் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்

தமிழகம், புதுச்சேரியில் வரும் 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் : வானிலை மையம் தகவல்..

Recent Posts