பட்டாசுகள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை இல்லை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு…

நாடு முழுவதும் பட்டாசுகள் தயாரிக்கவும் விற்பனை செய்யவும் தடை இல்லை என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.

நாடு முழுவதும் பட்டாசுகளை உற்பத்தி செய்யவும் விற்பனை செய்யவும் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது, காற்று மாசும், சுவாசக் கோளாறும் ஏற்படுகிறது,

ஆதலால் பட்டாசு தயாரிப்பு, விற்பனை, பாதுகாத்து வைத்தலுக்குத் தடை விதிக்க வேண்டும் என மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இதற்கு எதிராகப் பட்டாசு உற்பத்தியாளர்கள் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது, நாடு முழுவதும் பட்டாசுகளை தயாரிக்கவும் விற்பனை செய்யவும் தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதேசமயம், பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு சில கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

குறிப்பாக ஆன்லைன் மூலம் பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது, மாசு குறைவாக இருக்கும் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளனர்

சபரிமலை விவகாரம் : சீராய்வு மனுக்களை நவ., 13ஆம் தேதி விசாரணை..

அசோக் லைலேன்ட் நிறுவனத்தில் பணி..

Recent Posts