முக்கிய செய்திகள்

பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 700 பேர் மீது வழக்குப்பதிவு : வைகோ கண்டனம்..

தீபாவளி அன்று அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 700 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்வது தவறானது என கூறியுள்ளார்.

7 தமிழர்கள் விடுதலையில் ஆளுநரின் கருத்தை ஏற்க முடியாது என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் முல்லை பெரியாறு விவகாரத்தில் மத்திய அரசு துரோகம் செய்துள்ளது என்று ஈரோட்டில் பேட்டி ஒன்றில் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.