முக்கிய செய்திகள்

முதல் 10 பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியீடு : கத்தார் முதலிடம்..


சர்வதேச அளவில் முதல் 10 பணக்கார நாடுகளின் பட்டியலில் கத்தார் முதலிடம் பிடித்துள்ளது. ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், ஃபார்ச்சூன் பத்திரிக்கை ஜி.டி.பி. எனும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, வாங்கும் திறன், பண மதிப்பு உள்ளிட்டவற்றை கணக்கிட்டு முதல் 10 பணக்கார நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் 20 லட்சத்து 27 ஆயிரம் மக்கள் தொகையை மட்டுமே கொண்ட மத்தியக் கிழக்கு நாடான கத்தார் முதலிடம் பிடித்துள்ளது. அங்கு சராசரியாக ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 930 டாலர் தனி நபர் வருவாயாக உள்ளது.
லக்ஸம்பர்க் (Luxemnberg) இரண்டாவது இடத்திலும், சிங்கப்பூர் 3-வது இடத்திலும் உள்ளன. புரூனை (Beunei), அயர்லாந்து, நார்வே, ஆகிய நாடுகள் முறையே 4,5 மற்றும் 6-வது இடங்களைப் பிடித்துள்ளன.
குவைத், ஐக்கிய அரபு அமீரகம், சுவிட்சர்லாந்து, ஹாங்காங் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. முதல் 10 பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா இடம்பெறவில்லை.