முக்கிய செய்திகள்

முதன் முறையாக பெண் ஒருவர் தலைமை தாங்கும் குடியரசு தின அணிவகுப்பு…

டெல்லியில் நாளை நடைபெறும் இந்திய குடியரசு தினத்தின் ஆண் படையினரின் கம்பீர அணிவகுப்புக்கு வரலாற்றிலேயே முதன் முறையாக பெண் ஒருவர் தலைமை தாங்குகிறார்.

என்.சி.சி.யில் பயிற்சி பெற்று சிறப்புத் தேர்ச்சி பெற்றவர் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த லெப்டினன்ட் பாவனா கஸ்தூரி. 2015-ம் ஆண்டு அக்டோபரில் ராணுவப் பயிற்சி முடித்த அவர்

இந்திய வரலாற்றிலேயே அனைவரும் ஆண்களால் ஆன அணிவகுப்புப் படைக்கு முதல் பெண்ணாக தலைமைதாங்குகிறார்.

வரலாற்றில் இடம் பெறுவதை எண்ணி பூரிப்புடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். பெண்கள் பல துறைகளிலும் சாதித்து வருவதாகவும், இன்னும் அந்த அளப்பரிய சேவை அனைத்து துறைகளிலும் தொடரும் என பெருமிதம் தெரிவித்தார்.