முக்கிய செய்திகள்

மீனவர்களை அழைத்து வர தமிழக அரசு ஏற்பாடு: முதல்வர் பழனிசாமி உத்தரவு..


பிற மாநிலங்களிலிருந்து படகுகளுடன் மீனவர்களைத் தமிழகம் அழைத்து வர ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா – சந்தோஷ் பாபு, மகாராஷ்டிரா – ஷ்மபு கல்லோலிகர், குஜராத் – சந்திரகாந்த் பி.காம்ப்ளே, கேரளா – அருண் ராய், லட்சத்தீவு – ஜான் லூயிஸ் ஆகியோரை நியமித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளனர்.

கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, லட்சத்தீவு, குஜராத்க்கு தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். கடலோர காவல்படையினருடனான ஆலோசனைக்கு பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

உணவுப்பொருள் வாங்க படகில் உள்ள மீனவர்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்படும். அண்டை மாநிலங்களில் கரை ஒதுங்கிய மீனவர்கள் பத்திரமாக ஊர் திரும்ப அரசு டீசல் வழங்கும்.

அதாவது மீனவர்கள் சொந்த ஊர் திரும்ப விசைப்படகுக்கு 750 லிட்டரும், நாட்டுப்படகுக்கு 200 லிட்டரும், டீசல் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் இறங்குதள வசதியுடன் கடற்படை காவல் நிலையம் அமைக்கப்படும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.

ஆர்.கே.நகரில் தொகுதியில் அதிமுக பிரசாரம் நாளை முதல் தொடங்குகிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நாளை மாலையில் இருந்து பிரசாரம் தொடங்கப்படும். ஜெயலலிதா நிறைவேற்றிய திட்டங்களை முன் வைத்து வாக்கு சேகரிப்போம் என்றும் கூறியுள்ளார்.