கால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா? : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்

கால் விரல்களில் ஒரு பனிக்கட்டி போன்ற சொறி புதிய கரோனா வைரஸின் அறிகுறியாக இருக்கலாம் என தோல் மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளனர்.

கரோனா பாதிப்பு உலகம் முழுவதும் தனத கோரத் தாண்டவத்தை ஆடி வருகிறது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழந்தோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

கரோனா தொற்று காரணமாக நோய் அறிகுறிகள் புதிது புதிதாக உருவாகி வருகின்றன. அந்த வகையில் கால் விரல்களில் ஒரு பனிக்கட்டி போன்ற சொறி புதிய கொரோனா வைரஸின் அறிகுறியாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, உலகெங்கிலும் உள்ள தோல் மருத்துவர்கள் அளித்துள்ள சான்றுகளின் படி, ஒரு நபரின் கால் விரல்களில் ஒரு பனிக்கட்டி போன்ற சொறி புதிய கொரோனா வைரஸின் அறிகுறியாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த விசித்திரமான “சொறி” உண்மையிலேயே கொரோனா வைரஸால் ஏற்பட்டதா என்பதை அறிய ஆராய்ச்சி தேவை என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த கால் பகுதியின் வீக்கம், இளஞ்சிவப்பு – சிவப்பு நிற சொறி காலப்போக்கில் ஊதா நிறமாக மாறும். மேலும் சிலருக்கு எரியும் உணர்வை ஏற்படுத்தும். வீக்கம் இரண்டு முதல் மூன்று வாரங்களில் சிகிச்சையின்றி மறைந்துவிடும் என்கிறார் பாஸ்டனில் உள்ள மஸ்ஸாசூஸெட்ஸ் பொது மருத்துவமனையின் தோல் மருத்துவரான டாக்டர் எஸ்தர் ஃப்ரீமேன் தி கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், கால்விரல்களில் இருக்கும் அறிகுறிகள் தெரியாது. இந்த விசித்திரமான சொறி 20 அல்லது 30 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் பெரியவர்களை பாதிக்கும் என்றார்.

ஒரு வேளை யாருக்காவது கால் விரல்களில் வீக்கம் இருந்தால் அவர்கள் தோல் மருத்துவர், அல்லது கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளுக்கு சென்று தங்களை பரிசோதனைக்குட்படுத்திக் கொள்வது நல்லது” எனத் தெரிவித்துள்ளார்.

கோயம்பேடு மார்க்கெட் நமக்கு மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்..

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு..

Recent Posts