முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜகவில் இணைந்தார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பாஜகவில் இணைந்தார்.

இந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான கவுதம் கம்பீர், அருண் ஜெட்லியை சந்தித்து பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

சமீபகாலமாக அவர் பாஜக சார்பாக டெல்லியில் உள்ள மக்களவை தொகுதி  ஒன்றில் போட்டியிடப் போவதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், பாஜகவில் இன்று முறைப்படி இணைந்துள்ளார்.

மக்களவை தேர்தலுக்கு சில வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், கவுதம் கம்பீர் பாஜகவில் இணைந்துள்ளார்.