முக்கிய செய்திகள்

பாஜக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் காலமானார்..

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் (67) உடல் நலக் குறைவால் காலமானார்

உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுஷ்மா சுவராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

2014 முதல் 2019-ம் ஆண்டு வரை பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக சுஷ்மா சுவராஜ் பதவி வகித்துள்ளார்.

மேலும் 1998-ம் ஆண்டு டெல்லி முதலமைச்சராகவும் சுஷ்மா சுவராஜ் பதவி வகித்துள்ளார்.

2-வது பெண் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் உச்சநீதிமன்ற வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார்.

25 வயதில் எம்.பி.யாகி வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி வரை உயர்ந்துள்ளார்