தமிழக முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி(58) மாரடைப்பால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.
பரிதி இளம்வழுதி, தமிழக சட்டமன்ற உறுப்பினராக 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். 1989 முதல் 2011 வரை 28 ஆண்டுகள் தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆவார்.
சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் பரிதி இளம்வழுதியின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் 1996 – 2001-ல் துணை சபாநாயகராகவும், 2006 – 2011 வரை விளம்பரத்துறை அமைச்சராக பரிதி இளம்வழுதி பதவி வகித்தார்.
பரிதி இளம்வழுதி எழும்பூர் தொகுதியில் 1989 முதல் 2011 வரை தொடர்ந்து எம்எல்ஏவாக இருந்தார். 2013-ல் திமுகவில் இருந்து விலகிய பரிதி இளம்வழுதி அதிமுகவில் இணைந்தார்.
பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்ட போது ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்தார். தற்போது அமமுகவில் இருந்தார்.