முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலாமானார்

 

எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார். அவருக்கு வயது 93.

உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய், ஜூலை 11ம் தேதி டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை இன்று (ஆக.,16) காலை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், வாஜ்பாயின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அவர் தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளார். உயிர்காக்கும் உபகரணங்களுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் சற்று முன்னர் மாலை 5.05 மணிக்கு வாஜ்பாயின் உயிர் பிரிந்து விட்டதாக எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொற்பொழிவாளர், சமூக சேவகர், கவிஞர், பத்திரிகையாளர், பழுத்த நாடாளுமன்றவாதி, அனைவரையும் வசீகரிக்கும் வல்லமை,  என பல்வேறு பெருமைக்குரியவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்.

Former PM Vajpayee no more