மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி..

மலே­சி­யா­வின் 1எம்­டிபி நிதியை மில்­லி­யன் கணக்­கில் தவ­றா­கக் கையாண்­ட­தற்­காக 12 ஆண்­டு­கள் தண்­ட­னையை அனு­ப­விக்க முன்­னாள் மலே­சியப் பிர­த­மர் நஜிப் ரசாக் நேற்று கஜாங் சிறைக்குச் சென்றார்.
ஊழல் குற்­றச்­சாட்­டு­கள் தொடர்­பில் குற்­ற­வாளி என்று தீர்ப்­ப­ளிக்­கப்­பட்டு இருக்­கும் நஜிப், 69, அந்­தக் குற்­றத்தீர்ப்பை எதிர்த்து செய்த இறுதி மேல்­முறை­யீ­டும் தோல்­வி­ய­டைந்­தது.

அதி­கா­ரத்தைத் தவ­றா­கப் பயன்­ப­டுத்­தி­யது, கள்­ளப்­பண விவ­கா­ரம், நம்­பிக்கை மோசடி ஆகி­யவை தொடர்­பான ஏழு குற்­றச்­சாட்­டு­க­ளின் பேரில் நஜிப் குற்­ற­வாளி என்று தீர்ப்­ப­ளிக்­கப்­பட்டு இருந்­தது.

அதை மலே­சி­யா­வின் ஆக உய­ரிய மத்­திய நீதி­மன்­றம் நேற்று உறு­திப்­ப­டுத்­தி­யது.

நஜிப், 2020 ஜூலை மாதம் உயர் நீதி­மன்­றத்­தில் முதன்­முறையாக குற்­ற­வாளி என்று தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டார்.

நஜிப் $65 மில்­லி­யன் (210 மில்­லி­யன் ரிங்­கிட்) அப­ரா­தம் செலுத்த வேண்­டும் என்­றும் உயர் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது. இந்­தத் தீர்ப்பை மேல் முறை­யீட்டு நீதி­மன்­ற­மும் மத்­திய நீதி­மன்­ற­மும் உறு­திப்­ப­டுத்தி இருக்­கின்­றன.

நஜிப் தரப்­பில் முன்­னி­லை­யான வழக்­க­றி­ஞர்­கள் குழு, தன் கட்சிக்­கா­ரரைத் தற்­காக்க எழுத்து மூல­மா­கவோ, வாய் மொழி­யா­கவோ எந்­த­வொரு வாக்­கு­மூ­லத்­தை­யும் தாக்­கல் செய்ய மறுத்­து­விட்­டதை அடுத்து, ஒரு வார காலம் கழித்து தலைமை நீதி­பதி துங்கு மைமுன் துவான் மட் தலை­மை­யி­லான ஐந்து நீதி­ப­தி­க­ளைக் கொண்ட குழு நஜிப்­புக்கு எதி­ராக நேற்று தீர்ப்­ப­ளித்­தது.

தன்­னு­டைய மேல் முறை­யீட்டு மனுவை விசா­ரிக்­கும் குழு­விற்குத் தலைமை ஏற்று இருந்த தலைமை நீதி­ப­தியை அந்­தப் பொறுப்­பில் இருந்து விலக்க வேண்­டும் என்று கோரி கடைசி நேரத்­தில் நஜிப் எடுத்த முயற்­சி­யும் நேற்று தோல்வி­யில் முடிந்­தது.

தலைமை நீதி­ப­தி­யின் கண­வரான ஸமானி இப்­ரா­ஹிம் 2018ல் பதி­வேற்றி இருந்த ஃபேஸ்புக் செய்தி ஒன்றைச் சுட்­டிக்­காட்டி நஜிப் அந்தக் கடைசி நேர முயற்சியை எடுத்­தார்.

அந்­தச் செய்­தி­யில், நஜிப்­பின் தலை­மைத்­து­வத்தை திரு ஸமானி இப்­ரா­ஹிம் குறை­கூறி இருந்­தார்.

மேல்­மு­றை­யீட்டை நேற்று விசா­ரித்த தலைமை நீதி­பதி, தற்­காப்பு வாதங்­கள் முரண்­பா­டாக இருந்­த­தா­கத் தெரி­வித்­தார். ஆகை­யால், மேல்­மு­றை­யீ­டு­கள் ஏக­ம­ன­தாக நிரா­க­ரிக்­கப்­ப­டு­கின்­றன. நஜிப்­புக்கு எதி­ரான குற்­றத்தீர்ப்­பும் தண்­ட­னை­யும் உறு­திப்­ப­டுத்­தப் படு­கின்­றன என்று தலைமை நீதி­பதி நேற்று தீர்ப்­ப­ளித்­தார்.

இந்த வழக்கு நஜிப்­புக்கு எதி­ரான ஐந்து வழக்கு விசா­ர­ணை­களில் ஒன்­றா­கும்.

அவர், இதர குற்­றச்­சாட்­டு­களின் பேரில் நீதி­மன்ற விசா­ரணை­களில் முன்­னி­லை­யாக வேண்­டியநிலை இருக்­கிறது. அனைத்து குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் நஜிப் ஒப்­புக்­கொள்­ள­வில்லை.

அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னேறி வருகிறது: கோவையில் நலத்திட்ட உதவி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..

தேர்தலில் இலவச வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் வழங்க தடை கோரிய வழக்கு: வேறு அமர்வுக்கு மாற்றம்..

Recent Posts