முக்கிய செய்திகள்

இலவச மின்சாரத்தைத் துண்டித்தால் கொரோனாவின் எதிர்கால அலைகளை எதிர்கொள்ள முடியாது: வைரமுத்து டிவிட்…

இலவச மின்சாரத்தை துண்டித்தால் கொரோனாவின் எதிர்கால அலைகளை எதிர்கொள்ள முடியாது என கவிஞர் வைரமுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கவிஞர் வைரத்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: இந்திய உணவுக் களஞ்சியத்தை வழிய வழிய நிரப்பிக் கொடுத்தவர்கள் உழவர்கள்.

அதனால்தான் இன்று இந்தியாவின் வயிறு இறந்துவிடாமல் இருக்கிறது. இலவச மின்சாரத்தைத் துண்டித்தால் கொரோனாவின் எதிர்கால அலைகளை எதிர்கொள்ள முடியாது.

சிறப்போடு ஆள நினைப்பவர்கள் பொறுப்போடு சிந்திக்க வேண்டும். இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.