முக்கிய செய்திகள்

விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம் : குடியரசு தலைவா்


நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட, உயிா்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவதாக குடியரசு தின உரையில் ராம்நாத் கோவிந்த் பேச்சு.

நாட்டின் 69வது குடியரசு தினவிழா நாளை இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளாா். அவரது உரையில், நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட மற்றும் உயிா்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திக் கொள்வதாக தொிவித்துக் கொண்டாா்.

தொடா்ந்து பேசுகையில், ஜனநாயகத்தின் தூண்களாக நாட்டு மக்கள் திகழ்கிறார்கள். நாட்டை காக்கும் முப்படை வீரர்களுக்கும், நாட்டை வளப்படுத்தும் விவசாயிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு தூணாக இருக்கும் இளைஞர்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்கள்.

நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவர்களை நினைவு கூறும் நேரம் இது. எத்தனை தடைகள் வந்தாலும் அனைவரும் ஒற்றுமையாக இருந்து நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும். நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் துறைகளில் நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருவது பெருமை அளிக்கிறது.