முக்கிய செய்திகள்

ஜிசாட்-6ஏ செயற்கைக்கோளுடன் மார்ச் 29ல் விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்..


ஜிசாட்-6ஏ செயற்கைக்கோளுடன், ஜி.எஸ்.எல்.வி., எப்-8 ராக்கெட் மார்ச் 29ல் விண்ணில் பாய்கிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து நாளை மறுநாள் (மார்ச் 29) ஜி.எஸ்.எல்.வி., எப்-8 ராக்கெட், ஜிசாட்-6ஏ தகவல்தொடர்பு செயற்கைக்கோளுடன் மாலை 4.56 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இது இஸ்ரோவின் 12வது ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஆகும். 11 முறையில் 7ல் வெற்றியும் 4ல் தோல்வியும் ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.