கஜா புயல் பாதிப்பு : நாகை தரங்கம்பாடியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு..

கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டுப் போன கஜா புயலால் பாதிக்கப்ப்ட பகுதிகளை திமுக தலைவரும் எதிர் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார்.

இன்று நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வருகிறார். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு  நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

மீனவர்களை சந்தித்து புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.

மேலும் காரைக்கால் ,நாகை வேதாரண்யம் பகுதிகளையும் இன்று பார்வையிடுகிறார் மு.க.ஸ்டாலின்