கஜா புயல்: 16 ரயில்களை ரத்து செய்தது தெற்கு ரயில்வே …

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள கஜா புயல்கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு தென்மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது.

சென்னையில் இருந்து 520 கி.மீ தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 620 கி.மீ தொலைவிலும் இருக்கிறது.

இது நாளை மாலை கடலூர், பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் வருகையை ஒட்டி, நாளை மதியம் மழைப்பொழிவு ஏற்படும். அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு – தென்மேற்கு நோக்கி மேலும் நகர்ந்து வலுவடையும்.

இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கன மழை முதல் மிக கன மழை வரை பெய்யக்கூடும்.

கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டையில், தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் 20 செமீ.,க்கு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ மிக அதிக மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.