கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.1000 ஆயிரம் கோடி உடனடியாக ஒதுக்குவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கஜா புயலால் முழுவதும் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு ரூ.10 ஆயிரம், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.4, 100 நிவாரணம் , முகாம்களில் தங்கி உள்ள குடும்பத்திற்கு பாத்திரம் உட்பட பொருட்கள் வாங்க ரூ.3,800 வழங்கப்படும்.
சுமார் 175 மரங்கள் நடப்பட்டுள்ள எக்டேருக்கு ரூ.1, 92,500, தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.1,700 சொட்டுநீர் பாசன விவசாயிகளுக்கு 100 சதவீதம் மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் அளிக்கப்படும்.
முழுவதும் சேதமடைந்த விசைப்படகுகளுக்கு ரூ.5 லட்சம், பகுதி சேதமடைந்தவைகளுக்கு ரூ.3 லட்சம் , மீனவ குடும்பங்களுக்கு வாழ்வாதார நிதியாக ரூ.5000 ,
முழுவதும் சேதமான கட்டுமரங்களுக்கு தலா ரூ.42ஆயிரம், பகுதி சேதமடைந்தவைகளுக்கு தலாரூ.20ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.