“கஜா”விலிருந்து மீண்டெழுந்த காரைக்கால் நகரம்..

கஜா புயல் கரையைக் கடந்த போது தமிழகத்தின் நாகை மாவட்டம் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

இதுபோல் புதுச்சேரி பிராந்தியத்திற்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டம் கஜாவால் மிகவும் பாதிப்பிற்குள்ளனாது.

92 கி.மீ வேகத்தில் வீசிய சூறைக்காற்றால் ஆயிரக்கணக்கான மரங்கள்,நுாற்றுக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்தன. மின் இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
புதுவை முதல்வர் நாராயணசாமியின் உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் கேசவன் தலைமையில் மாவட்ட நிர்வாகத்தின் தீவிர முன்னேற்பாட்டால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

பாதிக்கப்படும் பகுதிகளை கண்டறிந்து அவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைத்து பேரிடரை பேரிழப்பு இல்லாமல் செய்தனர்.

புயல் தாக்குதால் பாதிப்படைந்த காரைக்கால் நகரை முற்றிலும் 8 மணி நேரத்திற்குள் மீட்டெடுத்தனர்.

நகரின் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு சீரானது. முக்கிய சாலைகளில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து சீராகி வருகிறது.

புதுவை முதல்வர் நாராயணசாமி காரைக்காலில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து நிவாரணப்பணிகளை துரிதப்படுத்தியுள்ளார்.

புயலின் தாக்கத்தின் போது இரவு முழுவதும் உன்னிப்பாக கவனித்து நிவாரணப்பணிகளை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்,

உயர் அதிகாரிகள், மின் ஊழியர்கள்,கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் பொது மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கஜா புயலை எதிர்கொண்ட தமிழக அரசுக்கு பாராட்டுகள்.

கஜா புயல் பாதிப்பால் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல்..

Recent Posts