
வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுவையில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலையில் கனமழைக்கு வாய்ப்பு. மேலும் கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.