இஸ்ரேல்- பாலஸ்தீனத்திடையே நடைபெற்று வரும் போரினால் காஸாவில் வாழும் மக்கள்,பச்சிளம் குழந்தைகள் என பலர் இரையாகிவருகின்றனர். நேற்று காஸா நகரின் மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகனை வீசியதில் 300 மேற்பட்டோர் இறந்துள்ளனர்.இந்நிலையில் காஸாவில் மனிதாபிமான போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தது, அது நிராகரிக்கப்பட்டது.
5 நாடுகள் போர் நிறுத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தன: ரஷ்யா, சீனா, காபோன்,மொசாம்பிக்,ஐக்கிய அரபு அமீரகம்
4 நாடுகள் இஸ்ரேலின் போரை நிறுத்த எதிராக வாக்களித்தன:
அமெரிக்கா,இங்கிலந்து,ஜப்பான்,பிரான்ஸ் வீட்டோ அதிகாராத்தால் ரஷ்யா கொண்டுவந்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.