முக்கிய செய்திகள்

ஜெர்மனியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழப்பு..

ஜெர்மனியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது ரோட் ஆம் சீ நகரம்.

இந்த நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் மர்ம நபர் ஒருவர் இன்று மதியம் திடீரென நுழைந்து அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுடத்தொடங்கினார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.