முக்கிய செய்திகள்

மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர்கள், மாணவர்கள் கைது: பீகாரில் நடந்த கொடூரம்..


பீகார் மாநிலம் பாட்னா அருகே 9 ம்வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ததாக பள்ளியின் தாளாளர், 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த 7 மாதங்களாக இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

சரண் மாவட்டம் சாப்ரா அருகே ஏக்மா என்ற பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்த மாணவியின் தந்தை சமீபத்தில், குற்றச்சம்பவம் தொரட்பாக சிறைக்கு சென்றார்.

இதனை பயன்படுத்த பள்ளிக்கு சென்ற மாணவியை முதலில் சக மாணவர்கள் பலாத்காரம் செய்துள்ளனர். தொடர்ந்து பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிறுமியின் தந்தை சிறையில் இருந்து வெளியே வந்ததும், மாணவி தந்தையிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அவர் போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரில் கடந்த 7 மாதங்களாக மாணவர்கள், ஆசிரியர்கள் மிரட்டி பலாத்காரத்தில் ஈடுபட்டனர். மொத்தம் 18 பேர் பலாத்காரம் செய்ததாக அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து பள்ளியின் தாளாளர், 2 ஆசிரியர்கள் சில மாணவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

பள்ளி வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.