முக்கிய செய்திகள்

‘போய் வேற வேலை இருந்தா பாருங்கடா’ : மதம் மாறியதாக வெளியான பதிவு குறித்து விஜய் சேதுபதி ஆவேசம்

வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக நடத்திய சோதனையில், அன்புசெழியனுக்கு தொடர்புள்ள இடங்களிலிருந்து ரூ.77 கோடி ரொக்கம், தங்க நகைகள், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

மேலும் இச்சோதனையின் போது மாஸ்டர் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த நடிகர் விஜய்யை அவரது வீட்டுக்கு அதிகாரிகள் அழைத்து வந்து சோதனை நடத்தியது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இச்சோதனையை அடுத்து சமூகவலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. ஜேப்பியார் கல்வி குழுமத்தை சேர்ந்த ரெஜினா,

தமிழகம் முழுக்க பெரும்பாலானோரை மதம் மாற்றும் முயற்சியில் இயக்கம் ஒன்றை உருவாக்கியிருப்பதாகவும், இதில் நடிகர் விஜய் சேதுபதி, ரமேஷ் கண்ணா, ஆர்த்தி உள்ளிட்டோர் கிறிஸ்துவ மதத்துக்கு மாறிவிட்டதாகவும் இதற்கான நிகழ்ச்சி வடபழனியில் நடந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


முதற்கட்டமாக இந்த நடிகர்களும், இவர்களை அடுத்தடுத்து சினிமாத்துறையில் பல நடிகர்களை கிறிஸ்துவ மதத்துக்கு மதம் மாற்ற முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கான பணம் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் தரப்படுவதாகவும், அமித் ஷா மற்றும் மோடி விதித்திருக்கும் பல்வேறு தடைகளைத் தாண்டி இந்தப் பணம் வந்து பிகில் படத்தில் முதலீடு செய்திருப்பதாகவும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் அண்மைக்காலமாக அதிகம் இணையதளத்தில் தென்பட துவங்கிய நிலையில், இதைக் கண்டு கோபமடைந்த விஜய்சேதுபதி, அத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு,

‘போய் வேற வேலை இருந்தா பாருங்கடா’ என்று ஆவேசமாக கூறியுள்ளார்தன்னைச் சுற்றி நடைபெறும் பரபரப்புகளுக்கு உடனுக்குடன் பதில் நிக்கும் விஜய்சேதுபதி அதே பாணியில் அவர் குறித்து பரவிய வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

View image on Twitter