கோவா சட்டப்பேரவை : நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பிரமோத் சவாந்த் வெற்றி..

கோவா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பிரமோத் சவாந்த் வெற்றி பெற்றார்.

கோவா முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் மறைந்த நிலையில், புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் நேற்று அதிகாலை 2 மணி அளவில் பதவியேற்றார்.

அதிக உறுப்பினர்களை கொண்ட தனிப்பெரும் கட்சியான தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநரிடம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.