முக்கிய செய்திகள்

கடவுள் ஒரு முட்டாள்: பிலிப்பைன்ஸ் அதிபரின் சர்ச்சை பேச்சு..


கடவுள் ஒரு முட்டாள் என்று கூறியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட், “கடவுள் ஒரு முட்டாள்” (Stupid God) என்று குறிப்பிட்டார். இதற்கு அந்நாட்டில் பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து ரோட்ரிகோ மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், “ஒரு மில்லியன் ஆண்டுகள் ஆனாலும் அதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்” என்று ரோட்ரிகோ திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

பைபிள் கதை ஒன்றில் ஆதாம் – ஏவாள் படைக்கப்பட்டது பற்றி பேசும் போதும் கடவுள் ஒரு முட்டாள் என்று கூறினார். இதற்கு கிறிஸ்துவ அமைப்புகள் பல ரோட்ரிகோ கடவுளை அவமதித்துவிட்டார் என்று கூறி மன்னிப்பு கோர வலியுறுத்தின.