கோதாவரி – காவிரி இணைப்பால் தமிழகத்திற்கு 175 டிஎம்சி நீர் : நிதின் கட்காரி…


கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு 175 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி – மதுரை நான்கு வழிச்சாலையில் சரக்கு வாகனங்கள் நிறுத்தும் முனையத்தை அவர் திறந்து வைத்தார். மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அமைச்சர் கடம்பூர் ராஜு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய நிதின் கட்காரி, தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை மேம்படுத்தும் பணிகள் முடிந்தவுடன், கொழும்பு துறைமுகத்தை சார்ந்திருக்க வேண்டியதில்லை என்றார்.

தூத்துக்குடி – மதுரை நான்கு வழிச்சாலையில், குறிப்பிட்ட சில இடங்கள் 6 வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளதாக தெரிவித்தார். கோதாவரி – காவிரி இணைப்பின் மூலம் தமிழகத்திற்கு 175 டிஎம்சிக்கும் அதிகமான தண்ணீர் கிடைக்கும் எனவும் நிதின் கட்காரி கூறினார்.

5 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கான பால் ஆதார் : மத்திய அரசு அறிமுகம்..

மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான நிதி ஆதாரம் எங்கே?: ப.சிதம்பரம் கேள்வி..

Recent Posts