முக்கிய செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.424 சரிவு…

கடந்த ஆறு நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வந்த ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரு சவரனுக்கு ரூ.424 குறைந்துள்ளது.

கடந்த 6 நாட்களில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,288 வரை உயர்ந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.

ஒரு சவரன் தங்கம் விலை ரூ.424 உயர்ந்து ரூ.30,744க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.53 உயர்ந்து, ரூ.3,843க்கு விற்பனையாகிறது.

சென்னையில் சில்லறை விற்பனையில் வெள்ளி விலையும் ரூ.1.20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.51க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திங்கள்கிழமையான நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.512 அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் ரூ.31,168 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று தங்கம் விலை குறைந்து விற்பனையாகி வருவது பொதுமக்களுக்கு சற்று ஆறுதலை அளிக்கிறது.

சா்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும். இதனால் அவ்வப்போது தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை உயா்ந்து பவுன் ரூ. 30 ஆயிரத்தை தாண்டி, புதிய உச்சத்தை எட்டியது. அதன் பிறகு சவரன் ரூ. 1,500 வரை விலை குறைந்தது. பின்னா் விலை சற்று ஏறுவதும் இறங்குவதுமாக காணப்பட்டது.

இந்நிலையில் புத்தாண்டு தொடங்கியதுமே தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. கடந்த 4- ஆம் தேதி தங்கத்தின் விலை கடுமையாக உயா்ந்தது. அன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரித்து மீண்டும் ரூ. 30 ஆயிரத்தை தாண்டியது. தொடா்ந்து ஏறுமுகத்தில் இருந்தது. சென்னையில் சனிக்கிழமை (ஜன.4) மாலை ஒரு கிராம் ரூ. 3,832-க்கும், ஒரு பவுன் ரூ. 30 ஆயிரத்து 656-க்கும் விற்பனையானது.

இந்நிலையில் திங்கள்கிழமை தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயா்ந்தது. ஒரே நாளில் கிராமுக்கு ரூ. 64 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 3,896-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ. 1.20 அதிகரித்து, ஒரு கிராம் ரூ. 52.20-க்கு விற்பனையானது. கிலோவுக்கு ரூ. 1,200 உயா்ந்து ரூ. 52 ஆயிரத்து 200-க்கு விற்பனை ஆனது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வர்த்தகம் தொடங்கியதும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.424 குறைந்த விற்பனையாகி வருகிறது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் …………….. 3,843
1 பவுன் தங்கம் …………….. 30,744
1 கிராம் வெள்ளி …………… 51.00

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் …………………..3,896
1 பவுன் தங்கம் ………………… 31,168
1 கிராம் வெள்ளி ……………… 52.20
1 கிலோ வெள்ளி ……………..52.20