தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 சரிவு…

தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.4,993-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.39,944க்கு விற்பனையாகிறது.

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.72க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டிருந்த நிலையில், படிப்படியாக குறைந்து 40 ஆயிரத்துக்கு கீழே வந்துள்ளது பெண்களுக்கு ஆறுதல் தந்துள்ளது.