தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 சரிவு..


தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.112 குறைந்துள்ளது.

இன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.14 குறைந்து, ரூ.2,805 ஆகவும், சவரனுக்கு ரூ.112 குறைந்து, ரூ.22,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் மதிப்புடைய தங்கத்தின் விலை, சவரனுக்கு, ரூ.121.60 காசுகள் குறைந்துள்ளது. சென்னையில், 24 கேரட் மதிப்புடைய ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை ரூ.15.20 காசுகள் குறைந்து, ரூ. 3,060 ஆகவும் சவரனுக்கு ரூ. 24,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 காசுகள் சரிந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.41.70 காசுகளுக்கும், கிலோ ரூ.41,700க்கும் விற்பனை செய்யப்படுகிறது.