முக்கிய செய்திகள்

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.48 சரிவு..


தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.48 சரிந்துள்ளது. இன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6 குறைந்து, ரூ.2,731 ஆகவும், சவரனுக்கு ரூ.21,848-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் மதிப்புடைய தங்கத்தின் விலை, சவரனுக்கு, ரூ.52.80 காசுகள் குறைந்துள்ளது. சென்னையில், 24 கேரட் மதிப்புடைய தூய தங்கத்தின் விலை கிராமுக்கு, ரூ.6.60 காசுகள் குறைந்து, ரூ.2,979.20 காசுகளாகவும், சவரனுக்கு ரூ.23,833.60 காசுகளாகவும் உள்ளது.

வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.10 காசுகள் குறைந்துள்ளது. இன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.40.20 காசுகளுக்கும், கிலோ ரூ.40,100க்கும் விற்பனை செய்யப்படுகிறது.