ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.304 ஆக உயர்ந்தது. தங்கம் விலை கடந்த 2 மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. கடந்த 23ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.44,168க்கு விற்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 7ம் தேதி தங்கம் விலை உயர்ந்தது. அதாவது, கிராமுக்கு ரூ.85 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,370க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,960க்கு விற்கப்பட்டது.
இந்த அதிரடி விலை உயர்வுக்கு இஸ்ரேல்-ஹமாஸ் இடையே உருவாகியுள்ள போரின் தாக்கமே என்று நகை வியாபாரிகள் கூறினர். கடந்த 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும்.
அதனால், தங்கம் விலையில் எந்தவித மாற்றம் ஏற்படவில்லை. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு 9ம் தேதி தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை மேலும் அதிகரித்து இருந்தது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,365க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,920க்கும் விற்கப்பட்டது.
நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து கிராம் ரூ.5380க்கும் சவரன் ரூ.43,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று சற்று குறைந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதாவது சவரனுக்கு ரூ.304 உயர்ந்து சவரன் ரூ.43,280க்கும், கிராம் ரூ.5,410க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் உயர்ந்து ரூ.75.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.