முக்கிய செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 உயர்வு..


தங்கம் விலை இன்று (பிப்.,02) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.256 ம், கிராமுக்கு ரூ.32 ம் உயர்ந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2925 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.31,250 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.23,400 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலையும் 20 காசுகள் உயர்ந்து ரூ.42.60 ஆக உள்ளது.