முக்கிய செய்திகள்

நகை கொள்ளையன் நாதுராம் குஜராத்தில் கைது..


சென்னை நகைக் கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த நாதுராம் குஜராத் மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.

சென்னை கொளத்தூரில் நகை கடையில் துளையிட்டு நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில்நாதுராமை பிடிக்க ராஜஸ்தான் சென்றிருந்த போது இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து வழக்கின் முக்கிய குற்றவாளியான நாதுராம் தலைமறைவானார். அவர் தேடப்பட்டு வந்த நிலையில் ராஜஸ்தான் மாநில போலீசார் குஜராத் மாநிலத்தில் அவரை கைது செய்துள்ளனர்.