கேரள வெள்ளத்தில் சிக்கியவர்கள் ஆப்லைனில் கூகுல் மேப்பின் +கோடைப் பயன்படுத்த அனுமதி

கேரளத்தில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்கள் தாங்கள் சிக்கியிருக்கும் இடத்தைத் தெரிவிக்க ஆஃப்லைனிலேயே மேப்-ன் பிளஸ் கோட் பயன்படுத்த கூகுள் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கியுள்ள கேரள மக்களின் பாதுகாப்பு கருதி, ஆப்லைனில் உள்ள போதே தாங்கள் இருக்கும் இடத்தை மீட்புக் குழு மற்றும் பிற உறவினர்களுக்குப் பகிர வாய்ப்பளித்துள்ளது. அதன் படி, ஆன்ட்ராய்டு பயனாளர்கள், தங்களின் லொகேசனை ஆன் செய்து, கூகுள் மேப்-ஐ திறந்து, தாங்கள் இருக்கும் இடத்தை சுட்டிக் காட்டும் நீல வட்டத்தை சில விநாடிகள் அழுத்திப் பிடிக்க வேண்டும்.

இதையடுத்து மொபைல் திரையின் அடி பாகத்தில் தோன்றும் விவரங்களைத் தொட்டால், அதில் கூட்டல் குறி போன்ற பிளஸ் கோடு கிடைக்கும். அதில் அவர்களின் நகரம், மாநிலத்தோடு 6 அல்லது 7 இலக்க எண் மற்றும் எழுத்துக்கள் இடம் பெற்றிருக்கும். அதைக் காபி செய்து மீட்புக் குழுவுக்கு அனுப்பினால் அவர்கள் துல்லியமாக அந்த இடத்தை அடைந்து எளிதில் உதவ முடியும்.

google allow to use offline Google map+code

கேரளாவுக்கு இடைக்கால நிவாரணாக ரூ.500 கோடி: பிரதமர் மோடி அறிவிப்பு

நிலுவைகளை வழங்கா விட்டால் விமானங்களை இயக்க மாட்டோம்: ஏர் இந்தியா விமானிகள் போர்க்கொடி

Recent Posts