முக்கிய செய்திகள்

கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்துக்கு வைகோ வருகை…


திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்துக்கு வைகோ வருகை தந்துள்ளார்.

முன்னதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் 4 பேர் கொண்ட காவேரி மருத்துவமனை மருத்துவக்குழுவினர் ஆகியோரும் கோபாலபுரம் இல்லத்துக்கு வருகை புரிந்துள்ளனர்.

கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டறிந்தார். சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதிக்கு தீவிர சிக்கிசை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.