முக்கிய செய்திகள்

கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு தீ விபத்து : 80 பயணிகள் பத்திரமாக மீட்பு..


ஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றில் சுற்றுலா பயணிகளை அழைத்துச்  சென்ற படகு திடீரென தீ பிடித்தது. படகில் பயணம் செய்த அனைவரும் பாதுகாப்பு கவசம் அணிந்திருந்ததால் ஆற்றில் குதித்தனர். இதனால் உயிர் சேதமில்லாமல் 80 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். கடும் வெப்பம் காரணமாக இஞ்சின் தீ பிடித்ததாக விசாரணையில் தெரியவந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.