சட்டப் பேரவையில் ஆளுநர் பற்றி பேச முயற்சித்த எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், மாநில சுயாட்சிக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக சாடினார்.
முன்னாள் ஆளுநர் சென்னாரெட்டி பற்றி மறைந்த ஜெயலலிதா பேரவையில் பேசியுள்ளதை சுட்டிக்காட்டினார். தற்போதைய ஆளுநர் வரம்பு மீறி செயல்படுவதால் அது பற்றி பேச பேரவையில் முயற்சித்த போது, அதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்துவிட்டதாக குறிப்பிட்டார்.