முக்கிய செய்திகள்

ஆளுநாின் பாதுகாப்பு வாகனம் மோதி இருவா் உயிரிழப்பு…


ஆளுநா் பன்வாாிலால் புரோகித்தின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் மாமல்லபுரம் அருகே இருவா் உயிாிழந்தனா். ஒருவா் படுகாயமடைந்துள்ளாா்.

தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுள்ள பன்வாாிலால் புரோகித் கோவை, திருநெல்வேலி மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டா்ா. மேலும் தமிழக அரசின் செயல்பாடு, அரசு அதிகாாிகளின் சேவைகள் தொடா்பாக அவா் கேட்டறிந்தாா். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிா்ப்பு தொிவித்து வந்தனா்.

எதிா்ப்புகளை கண்டுகொள்ளாத ஆளுநா் இன்று கடலூா் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், மக்களிடம் குறைகள் கேட்டறியப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆளுநாின் இந்த நடவடிக்கைக்கு எதிா்க்கட்டியினா் கடும் எதிா்ப்பு தொிவித்திருந்தனா். அதனையும் தாண்டி இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வு பணிகள் முடிவடைந்த நிலையில், ஆளுநாின் பாதுகாப்பு வாகனம் காஞ்சிபுரத்தில் இருந்து மாமல்லபுரம், புதுகல்பாக்கம் வழியாக சென்னைக்கு வந்துகொண்டிருந்தது. அப்போது சாலையை கடக்க முற்பட்ட பொதுமக்கள் மீது ஆளுநாின் பாதுகாப்பு வாகனம் பயங்கரமாக மோதியுள்ளது.