கோவிந்தராஜ் சீனிவாசனின் முகநூல் பதிவு...
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை மழைவெள்ள பாதிப்பில் இருந்து காப்பாற்ற, வடிகால் அமைக்க, ரூ 1500 கோடி பிரதமரிடம் கேட்டதாக தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர்.
விளை நிலங்களை வீட்டுமனைகளாக்கி, விதிமுறைகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு, நீர் நிலைகளில், நீர் வழிப்பாதைகளில் எல்லாம் கட்டுமானங்களை செய்தவர்களை காப்பாற்ற ரூ 1500 கோடி கேட்கிறார் முதல்வர்.
மறுபுறம் இரண்டு ஆண்டுகளாக வறட்சியின் கொடுமையால் பாசனம் செய்ய முடியாமல் தற்போது கிடைத்த நீரைக் கொண்டு பயிரிட்ட நெற்பயிர்களை மழை வெள்ளத்தில் மூழ்கடித்து, தண்ணீரில் மீன் அழுவது போல அழுது கொண்டு இருக்கும் டெல்டா விவசாயிகளைப் பற்றி அரசு அக்கறை காட்ட வேண்டாமா?
வயல்வெளிகளை மழை வெள்ள நீர் நிறைப்பதை தடுக்க திட்டம் வேண்டாமா? மழை நீரை தேக்கி விவசாயம் பெருக யோசிக்க வேண்டாமா? இது வரை அது தொடர்பான ஒரு அறிவிப்பும் வரவில்லையே?