முக்கிய செய்திகள்

ரபேல் விவகாரத்தில் மத்திய அரசின் தலையீடு இல்லை: விமானப் படைத் தளபதி தனோனா

 

ரபேல் போர் விமானங்கள் தயாரிப்பதில் ரிலையன்ஸ் நிறுவனம் பங்குதாரராக சேர்க்கப்பட்டதில், மத்திய அரசுக்கோ, விமானப் படைக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என விமானப்படைத் தளபதி பி.எஸ்.தனோனா தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தேர்வு செய்தது, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டசால்ட் நிறுவனம்தான் என்றும் கூறியுள்ளார். ரபேல் போர் விமானங்கள் மிகவும் தரமானவை எனத் தெரிவித்துள்ள தனோனா, அவற்றின் மூலம் இந்தியாவின் ராணுவ வலிமை மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Govt had no role in Rafale deal, : IAF Chief Dhanoa