அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீட்டிற்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி..

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்த காரணத்தினால், தமிழக அரசு, அரசு பள்ளி பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றியது.

இந்த சட்டத்திற்கு ஆளுநரும் ஒப்புதல் வழங்கி, கடந்த ஆண்டு தமிழகத்தை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். இதேபோல், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.

இந்த சூழலில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டையை சேர்ந்த ராஜஸ்ரீ என்ற பள்ளி மாணவி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றம் நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்தனர். மேலும் மாணவி ராஜ்ஸ்ரீ உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக முறையீடு செய்யுமாறு அவருக்கு அறிவுறுத்தி, வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

நடிகை குஷ்புவின் டிவிட்டர் கணக்கு முடக்கம்..

பெகாசஸ் உளவு விவகாரம்: இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி ..

Recent Posts