முக்கிய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் வருகைப் பதிவிற்கு பயோமெட்ரிக் கருவி : தமிழக அரசு

அரசு ஆசிரியர்களின் வருகையைப் பதிவு செய்ய பயோமெட்ரிக் கருவிகள் பொருத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

2018-19ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் போது பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகையைப் பதிவு செய்ய பயோமெட்ரிக் கருவி முறை அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்களுடன் அரசு ஆலோசனை நடத்தியது. அப்போது பயோமெட்ரிக் கருவி அல்லது டாப் என்ற கணினி மூலம் வருகைப் பதிவு நடத்த அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து ரசுப் பள்ளிகளில் கருவிகள் பொருத்தும் பணிகள் தொடங்கின. முதல்கட்டமாக அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் 3,688 உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 41,805 பேர் பயன்பெறுவர்.

இதேபோல் 4,040 மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 774 பேரும் பயன்பெறுவர். இதற்காக ரூ.15.30 கோடி செலவிடப்பட்டு பயோமெட்ரிக் முறை அமல்படுத்த திட்டமிடப்பட்டது.